அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை: 4 பேர் கைது

இந்தியாவில் புதுச்சேரியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை பொலிஸார் கைது செய்த நிலையில், மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

திருப்பாதிரிப்புலியூர் பகுதியை சேர்ந்த பத்மநாபன் என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த ஆண்டு ஆட்டோ சாரதி பாஸ்கர் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக கைதாகி ஜாமீனில் வெளியே இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திருப்பணாம்பாக்கத்தில் நடந்த கோயில் திருவிழாவிற்கு சென்று தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் திரும்பியபோது பாகூர் இருளஞ்சந்தை பகுதியில் காரில் வந்த கும்பல் பைக் மீது மோதி அவரை கீழே தள்ளி சரமாரியாக வெட்டியதில் அவர் அங்கேயே உயிரிழந்தார்.

பாஸ்கர் கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்