
மட்டக்களப்பிற்கு பிரதமர் விஜயம் : அதிதிகளின் கதிரையை புறக்கணித்த சாணக்கியன்
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிரதமரின் வருகையை முன்னிட்டு இடம்பெற்ற கூட்டத்தின் போது அதிதிகளிற்கான வரிசையில் இருந்த கதிரையை புறக்கணித்து மக்களோடு மக்களாக தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அமர்ந்திருந்தார்.
இவ் கூட்டத்தின போது மட்டக்களப்பில் செயற்பட்டுவரும் அரசசார் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊழல்கள் பற்றிய ஆவணத்தினையும் பிரதமரிடம் சாணக்கியன் சமர்ப்பித்திருந்தார்.
இதையடுத்து இந்த ஊழல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள ஊழல் மோசடி விசாரணைக் குழு ஒன்றினை அமைப்பதாக உறுதியளித்திருந்தார்.
ஊழல்களுக்கு எதிராக எதிர்வரும் காலங்களில் நடவடிக்கை எடுக்கப்படாதவிடத்து அரச தலைவர்களின் வருகைகளை ஒட்டி மக்களுடன் ஒன்றிணைந்து எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்கப்படும் என்பதனையும் சாணக்கியன் வலியுறுத்தினார்.




