அதிக வெப்பம்: கணினி பாவனையாளர்களே பாதிக்கப்படலாம்

அதிக வெப்பம் காரணமாக கண் நோய்கள் ஏற்படும் சாத்தியங்கள் காணப்படுகின்றன என கண் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சூரிய ஒளி நேரடியாக கண்ணில் பட்டால், அதன் செல்கள் சேதமடைவதுடன், விழிப்புலன் இழக்கப்படலாமென கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர், கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் மதுவந்தி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், வெப்பம் காரணமாக கண் வறட்சி ஏற்படும் என்பதனால், தேவையான நீராகாரங்களை உட்கொள்வது அவசியமென அவர் தெரிவித்துள்ளார்.

வயதானவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு அதிக பாதிப்புக்கு உள்ளாகலாம் எனவும் கணினி பாவனை அதிகம் உள்ள நபர்கள் மற்றும் ஏற்கனவே கண் நோய் உள்ளவர்களுக்கு பாதிப்புகள் அதிகரிக்கக் கூடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.