
அதிக வெப்பத்தால் இருவர் மரணம்
எப்பாவல பகுதியில் அதிக வெப்பம் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதுல தம்மிக்க (வயது – 34) மற்றும் எல்.ஜி. விஜேசிங்க (வயது – 38) ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் ஒருவர் புத்தாண்டு விழாவில் கயிறு இழுத்தல் போட்டியில் பங்கேற்று களைப்பு காரணமாக ஐஸ் தண்ணீரை தலையில் ஊற்றியதில் ஏற்பட்ட பாதிப்பால் இறந்துள்ளார், மற்றவர் தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது வெப்பம் தாங்காமல் இறந்துள்ளதாக எப்பாவல மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.
இது தொடர்பில் எப்பாவெல அரசு மருத்துவமனை வைத்தியர் என்.எச். திஸாநாயக்க தற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமாக அதிர்ச்சி மற்றும் திடீர் மாரடைப்பு காரணமாக இருவரும் உயிரிழந்ததாக மரண விசாரணை அறிக்கை மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
