அதிக விலைக்கு தண்ணீர் போத்தல்கள் விற்பனை
நிர்ணயிக்கப்பட்ட விலைக்கும் அதிகமான விலையில் தண்ணீர் போத்தல்களை விற்பனை செய்த விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட அபராதம் மூலம் 25 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் முதல் செப்டெம்பர் மாதம் 30 வரையான காலப்பகுதிக்குள் குறித்த வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் 306 சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதிகளவான சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் கொழும்பு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சுற்றிவளைப்பின் போது நிர்ணயிக்கப்பட்ட விலைக்கும் அதிகமான விலையில் தண்ணீர் போத்தல்களை விற்பனை செய்த விற்பனை நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் கீழ் விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்டதாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.