
அதிக விலைக்கு சீனி விற்றால் சட்ட நடவடிக்கை
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் கூற்றுப்படி, அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் சீனி விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை கண்டறிய நாடு முழுவதும் சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளது
இவ்வாறு அதிக விலைக்கு சீனியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியல்ல தெரிவித்துள்ளார்.
