அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வர்த்தக நிலையம் : நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளினால் வழக்கு தாக்கல்!
-பதுளை நிருபர்-
கட்டுப்பாட்டு விலையை மீறி அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த வர்த்தக நிலையம் ஒன்றுக்கு எதிராக நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளினால் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் தலைமை அதிகாரி ஷான் யாபாரத்ன தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் அரிசிக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசி விற்பனையில் ஈடுபட்டமை மற்றும் அரிசிக்கு விலைப்பட்டியல் இடாமல் அரிசி விற்பனையில் ஈடுபட்டுடமை ஆகிய குற்றங்களுக்காக குறித்த வர்த்தக நிலையத்துக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்