அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைக் குறியீடும் இன்று செவ்வாய்க்கிழமை 49.77 புள்ளிகளால் உயர்வடைந்துள்ளது.
இன்றைய நாள் நிறைவில் அது 19,972.79 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
அதன்படி, இன்றைய விற்றுமுதல் ரூ. 7.6 பில்லியனாகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.