
அதிகரித்த நிதிச் செலவுகளுக்கு முகங்கொடுத்துள்ள ஆடை ஏற்றுமதியாளர்கள்
ஆடைகளின் விலைகள் உயர்வடையக்கூடும் என ஆடை ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எளிமைப்படுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி முறையை இரத்து செய்யும் தீர்மானம் ஆடை ஏற்றுமதி வருவாயில் குறிப்பிடத்தக்க சரிவை ஏற்படுத்தக்கூடும் என ஆடை ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர்.
இலங்கையின் ஆடை ஏற்றுமதியாளர்கள் அதிகரித்த நிதிச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும் என கூட்டு ஆடை சங்க மன்றத்தின் பொதுச் செயலாளர் யொஹன் லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த தொழில்துறைக்கான வட்டிச் செலவு மாதம் ஒன்றுக்கு ரூ.212 மில்லியன் என யொஹன் லோரன்ஸ் கூறினார்.
அண்மையில் நடைபெற்ற இலங்கை கூட்டு ஆடை சங்கத்தின் கூட்டமொன்றில் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்திருந்தார்.
தற்போது எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் நடைமுறைக்கு வருமாயின் குறித்த துறையுடன் தொடர்புடைய வர்த்தக நிறுவனங்களை வெளிநாடுகளுக்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்படும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

