அதிகரித்து வரும் யானைகளின் உயிரிழப்பு – இலங்கை சட்டதரணிகள் சங்கம் அழைப்பு
நாட்டில் யானைகளின் உயிரிழப்பு அதிகரிக்கின்றமை தொடர்பில் வருத்தம் தெரிவித்துள்ளதோடு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
அக் கடிதத்தில்,
உலகிலேயே அதிகளவில் இலங்கையில் யானைகள் உயிரிழக்கின்றன. கடந்த ஆண்டுகளில் சிறுத்தைகள் மற்றும் பிற பாதுகாக்கப்பட்ட விலங்கினங்கள் தொடர்ந்து கொல்லப்படுகின்றன.
இலங்கையின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் நாட்டின் வளமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இது எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கப்பட வேண்டும்.
இலங்கைக்கு வருகை தரும் மில்லியன் கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வளவிலங்குகளால் ஈர்க்கப்படுகின்றன. நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த விடயத்தை கருத்தில் கொண்டு தற்போதுள்ள சட்ட கட்டமைப்பிற்கு அவசர திருத்தம் மற்றும் மறுசீரமைப்பு தேவை. விரிவான சட்ட சீர்திருத்தங்களுக்கான தனது சொந்த திட்டங்களை விரைவில் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க உள்ளோம்.
இடைக்காலத்தில், குற்றவாளிகளுக்கான அபராதங்கள் மற்றும் பிற தண்டனைகளை அதிகரிக்கும் நோக்கில், தற்போதுள்ள சட்டங்களில், குறிப்பாக விலங்கினங்கள் மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தில் குறுகிய கால திருத்தங்களை பரிசீலிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.
பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள், குறிப்பாக யானைகள் மற்றும் சிறுத்தைகள் சட்டவிரோதமாக கொல்லப்படுவதைத் தடுக்க இத்தகைய நடவடிக்கைகள் உடனடித் தடைகளாக செயல்படும்.
தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தி, இந்த நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் அரசாங்கத்திற்குத் தேவையான ஆதரவை வழங்க தயாராகவும் ஆர்வமாகவும் உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடிதத்தில் இலங்கை சட்டதரணிகள் சங்க தலைவர் ராஜீவ் அமரசூரிய மற்றும் செயலாளர் சத்துர கல்ஹேன ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
