அதிகரித்தது ஆசிரியைகளின் எண்ணிக்கை

நாட்டிலுள்ள அரச பாடசாலைகளில் சேவையாற்று ஆசிரியர்களின் எண்ணிக்கையை விட ஆசிரியைகளின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதுமுள்ள 10 ஆயிரத்து 126 பாடசாலைகளில் 2 இலட்சத்து 36 ஆயிரத்து 738 ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர். இவர்களுள் 56 ஆயிரத்து 817 பேர் ஆசிரியர்கள் உள்ள நிலையில் ஒரு இலட்சத்து 79 ஆயிரத்து 921 பேர் ஆசிரியைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆசிரியைகளின் எண்ணிக்கை மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கையில் 76 வீதமாகும்.

 

கல்வி அமைச்சின் 2022 ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்பு அறிக்கையின் படி இத்தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.