அதிகரிக்கும் தேர்தல் விதிமீறல்கள்: 24 மணிநேரத்தில் 57 முறைப்பாடுகள்

எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளது.

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 180 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 357 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 57 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், இதுவரை தேர்தல் குறித்த வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பான முறைப்பாடுகளே இதுவரை கிடைக்கப் பெற்றுள்ளது.

அதனடிப்படையில் இதுவரையான முறைப்பாடுகளில் 412 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் கண்டறியப்பட்ட நிலையில், 125 முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.