அதிகரிக்கும் டெங்கு: மக்களுக்கு எச்சரிக்கை
நாட்டில் டெங்கு நோய் பரவல் 30 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி கடந்த ஒக்டோபர் 2ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 684 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அதற்கு முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் கடந்த வாரத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 65,479 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் அது டெங்கு காய்ச்சலாக இருக்கலாம் எனவும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் உடனடியாக வைத்தியரை நாடுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்