
அதிகரிக்கும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 24 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக இலங்கை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 வேட்பாளர்கள், 12 சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் பிற அரசியல் கட்சிகளில் இருந்து ஒரு வேட்பாளர் ஆகியோர் அடங்குவர்.
இரண்டு வேட்பாளர்கள் சார்பில் இன்று வியாழக்கிழமை கட்டுப்பணம் செலுத்தப்பட்டதுடன், இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம். பண்டார மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அனுர சிட்னி ஜயரத்ன ஆகியோர் சுயேட்சை வேட்பாளர்களாக போட்டியிட உள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
