அதிகரிக்கும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை
இந்த வருடத்தில் கொவிட் தொற்றாளர்கள் மற்றும் இறப்புகளின் அதிகபட்ச தினசரி எண்ணிக்கை கடந்த சனிக்கிழமை பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் தினசரி நிலைமை அறிக்கை தெரிவித்துள்ளது.
குறித்த தினத்தில் 15 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், மூன்று உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாட்டில் சிகிச்சை பெறும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையை 61 ஆகவும், இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 672இ357 ஆகவும் உள்ளது.
மேலும், மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கையை 16,864 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்