அண்மைய நாள்களில் 21 காட்டு யானைகள் சுட்டுக் கொலை

அண்மைய நாள்களில் 21 காட்டு யானைகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வதால் , சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் சுற்றுச்சூழல் பிரதியமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார் .

நேற்று பொலன்னறுவை பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பிரதியமைச்சர் இதனை தெரிவித்தார்.

நாட்டின் பல பகுதிகளில் இருந்து பல்வேறு காரணங்களால் காட்டு யானைகள் இறக்கும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார் .