அண்ணன் தங்கை கவிதை
💞தங்கை கண்ணில்
கண்ணீர் வந்தால்
அண்ணன் நெஞ்சில்
ரத்தம் வருவது போன்ற
வலி இருக்கும்..
💞தங்கை தன் அண்ணனை
யாருக்காகவும் விட்டு
கொடுக்க மாட்டாள்..
💞தங்கைக்கு வாழ்க்கை
அமையும் வரை தன்
வாழ்க்கையை பற்றி
நினைக்க மாட்டான்
அண்ணன்..
💞தங்கை உள்ளவனுக்கு
தங்கமாளிகை
தேவையில்லை..
தங்கை உள்ளமே
தங்கமாளிகை தான்..
💞வலிக்காமல் குட்டுவது
எப்படி என்பது தங்கைகளுக்கு
மட்டுமே தெரியும்.. அது போல
வலித்தது போல் நடிக்க
அண்ணன்களால்
மட்டுமே முடியும்..
💞கையில் மருதாணி வைத்து
அவசரமாய் என்னிடம்
ஓடி வரும் போது ஓர்
உலக அதிசயமாய்
என் தங்கை..
💞தங்கையின் வாழ்க்கைக்காக
தன் வாழ்க்கையை கூட
தியாகம் செய்பவன்
அண்ணன் மட்டும் தான்..
💞விடுமுறை தினங்களில்
சைக்கிள் ஓட்ட
கற்றுத்தருவாய் முயற்சித்து
மணலில் நான் விழுகையில்
மாரோடு அணைக்கும்
தாயும் நீயே அண்ணா..
💞அண்ணன் தங்கை
எவ்வளவு தான் சண்டை
போட்டாலும் அடுத்த
நொடியே இருவரும்
பேசிக் கொள்வார்கள்..
அது தான் உடன்
பிறந்த பாசம்..
💞தன் தங்கைக்காக எந்த
சூழ்நிலையையும் தாங்கி
கொள்பவன் அண்ணன்
மட்டுமே..
💞அண்ணன் தங்கை உறவு
என்பது வெறும் கையில்
கட்டும் கயிற்றில் வாழ்வதில்லை..
அது இதயத்தில் வாழ்வது..
💞எந்த செயலையும் துணிந்து
செய்வான் தன்
தங்கைக்காக அண்ணன்..
💞எத்தனை முறை அம்மா
திட்டினாலும் ஓய்வதே
இல்லை அண்ணன்
தங்கை சண்டை..
💞தன் உயிர் உள்ளவரை
அண்ணனிடம் அன்பும் பாசமும்
காட்டுபவள் தங்கை..
💞தங்கை அண்ணன் மீது
காட்டும் அதிகபட்ச பாசம்
சண்டையாக தான் இருக்கும்..
💞மலர்களோடு மலராக
பூத்திருக்கும் ரோஜாவே
தங்கை.. உன்னைக்
காப்பதற்கு முள்ளாக
நானிருப்பேன்..
💞என்றுமே மாறாத அன்பு
என் அன்புத் தங்கையே
உனக்கு மட்டுமே என்றுமே
இந்த அண்ணன் உனக்கு
கொடுப்பேன்..
💞தங்கை என்றும் அண்ணனுக்கு
விலை மதிக்க முடியாத
பொக்கிஷம்..
💞அண்ணன் எது வாங்கிக்
கொடுத்தாலும் தங்கை
குறை சொல்லாமல்
இருக்க மாட்டா.. ஆனா
எல்லோரிடமும் இது என்
அண்ணன் வாங்கித் தந்தது
என்று பெருமையாக
சொல்லுவாள்..
💞வாசித்த கவிதைகளில்
யோசிக்க வைத்த வரி அண்ணா…
சுவாசித்த இதயங்களில் நேசிக்க
வைத்த வரி தங்கை..
💞தன் தங்கைக்காக எல்லோரையும்
எதிர்த்து நின்று போராடுபவன்
அண்ணன் மட்டும் தான்..
💞உடல் முழுதும் இரத்தம் வந்தாலும்
அதையும் தாங்கிக் கொண்டு
தன் தங்கைக்காக உழைப்பவன்
தான் அண்ணன்..
💞எனக்கு இன்னொரு தாய் தந்தை
என் அண்ணனே என்று
கூறுவாள் தங்கை..
அண்ணன் தங்கை கவிதை
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்