
அண்டார்டிகாவின் மிக உயரமான மலையில் ஏறி சாதனை படைத்த இலங்கையர்
அண்டார்டிகாவின் மிக உயரமான மலையான மவுண்ட் வின்சன் மலையில் ஏறி ஜோஹன் பெரிஸ் சாதனை படைத்துள்ளார்.
4,892 மீட்டர் உயரம் கொண்ட மவுண்ட் வின்சன் மலை ஏறிய முதலாவது இலங்கையர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார்.
2018 ஆம் ஆண்டில், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இரண்டாவது இலங்கையராக ஜோஹன் பெரிஸ் பிரபல்யம் அடைந்த நிலையில் ஐரோப்பாவில் உள்ள எல்ப்ரஸ் மலை, ஆப்பிரிக்காவில் உள்ள கிளிமஞ்சாரோ மலை மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள கோஸ்கியுஸ்கோ மலை ஆகியவற்றின் சிகரங்களை அவர் தொட்டுள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.
மேலும் உலகளவில் 350 பேர் மட்டுமே மவுண்ட் வின்சன் மலை ஏறியுள்ளமை சுட்டிகாட்டதக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்