அட்டுலுகம சிறுமி கொலை : சந்தேகநபர் இன்று நீதிமன்றில் வாக்குமூலம்
பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், இன்று புதன்கிழமை நீதிமன்றில் வாக்குமூலம் வழங்கவுள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை சந்தேக நபரை பாணந்துறை பிரதான நீதவான் ஜயருவன் திஸாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்திய பொலிஸார், விசாரணைகளுக்காக அவரை எதிர்வரும் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
அதற்கமைய, சந்தேகநபரை இன்று புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க பாணந்துறை பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வழக்குப் பொருளாக, குறித்த சிறுமி கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அணிந்திருந்த ஆடை பொலிஸாரால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், சந்தேகநபர் சார்பில், சட்டத்தரணிகள் எவரும் மன்றில் முன்னிலையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
