அடையாளம் தெரியாத முதியவரது சடலம் மீட்பு

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் பண்டாரவலை பேருந்து தரிக்கும் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை அடையாளம் தெரியாத முதியவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இறந்தவர் 60வயதிற்கு மேற்பட்டவராக இருக்கும் எனவும் இதுவரை யாரும் சடலத்திற்கு உரிமை கோரவில்லை என்பதுடன் இறப்பிற்கான காரணம் தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.