அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு
களுத்துறை மஹா பள்ளிய பிரதேசத்தில் வீதியொன்றுக்கு அருகில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சடலம் 5 அடி 6 அங்குல உயரம் கொண்ட மெலிந்த உடல் அமைப்பை கொண்ட ஆண் எனவும் அவர் நீண்ட கை சட்டையும், சாம்பல் நிற சாரம் ஒன்றை அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலத்தை அடயாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்