அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு கனமழை!
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து வருவதால், அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது கனமழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மாகாணம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் நாளை வெள்ளிக்கிழமை காலை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது