அடுத்த வருடம் ஏப்ரல் வரை தேங்காய்க்கு தட்டுப்பாடு

நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் வீழ்ச்சியினால் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை தேங்காய் தட்டுப்பாடு தொடரும் என தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மழையின்மை மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு போன்ற காரணங்களால் கடந்த வருடத்தை விட இந்த வருடம் தேங்காய் உற்பத்தி குறைந்துள்ளதாக அதன் பணிப்பாளர் கயானி ஹெட்டியாராச்சிகே சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தேங்காய் தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில், ஏற்றுமதித் தேவைக்காக தேங்காய்ப் பாலை இறக்குமதி செய்வதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு அமைச்சரவை இன்னும் அங்கீகாரம் வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்