
அடுத்த மாதம் டொனால்ட் ட்ரம்ப் சவூதி அரேபியாவிற்கு பயணம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது முதல் உத்தியோகபூர்வ விஜயமாக சவூதி அரேபியாவிற்கு பயணமாகவுள்ளார்.
அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பயணத்தை தொடங்குவார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
அமெரிக்காவிற்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையிலான பல முதலீட்டு ஒப்பந்தங்களும் அங்கு கைச்சாத்திடப்பட உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தப் பயணத்தின் போது கட்டாருக்குச் செல்லவும் ட்ரம்ப் எதிர்பார்த்திருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
