அடுத்த ஜனாதிபதியாக சிலரை பரிந்துரை
மக்கள் போராட்டத்தை தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ எதிர்வரும் 13 ஆம் திகதி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், ஆளும் பொதுஜன பெரமுன, டலஸ் அலகப்பெருமவை ஜனாதிபதியாக நியமிக்க ஒரு குழுவும், தம்மிக்க பெரேராவை நியமிக்க இன்னுமொரு குழுவும் பரிந்துரைகளை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பிரதமர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை பரிந்துரை செய்யும் முடிவொன்று எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.
ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன சுயாதீன அணி, ஆகியன நேற்று சந்தித்து கலந்துரையாடி இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இலங்கையில் புதிய அரசாங்கம் ஒன்று விரைவில் ஸ்தாபிக்கப்படுவது அவசியமாகும் என அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களம் அந்நாட்டு செய்தியாளர்களிடம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
