
அடுத்த சில மணிநேரங்களுக்கு 150 மில்லிமீட்டருக்கும் அதிக பலத்த மழை!
அடுத்த சில மணி நேரங்களுக்கு மேல், சபரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களிலும், அனுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மில்லிமீட்டருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.
