
அடுத்தடுத்து இரண்டு நில அதிர்வுகள் : அச்சத்தில் மக்கள்
ஆப்கானிஸ்தானில் இன்று புதன்கிழமை நள்ளிரவு அடுத்தடுத்து இரண்டு நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.
பைசாபாத்தில் இருந்து 126 கிலோமீற்றர் தொலைவில் நள்ளிரவு 12.28 க்கு 4.4 ரிக்டர் அளவிலும், பைசாபாத்தில் இருந்து 100 கிலோமீற்றர் தொலைவில் நள்ளிரவு 12.55 க்கு 4.8 ரிக்டர் அளவிலும் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
