அடக்குமுறைக்குத் தயாராகாதீர்கள்- நாமல் எச்சரிக்கை

அரசாங்கம் இனிமேல் அடக்குமுறைக்குத் தயாராகக் கூடாது என்றும், தங்களது பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அளுத்கமவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின் போது நாமல் ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த நேரத்தில் அரசாங்கத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை மறைக்க அரசியல் கைதுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஒரு அரச தலைவரை கைது செய்வதன் மூலம் நாட்டின் பிரச்சினைகள் தீர்க்கப்படாது என்றும், ஜேவிபி தலைவர்களை பாதுகாக்க ஒரு தலைமுறையோ அல்லது பாதுகாக்க ஒரு நாடோ இல்லை என்றும், தங்களுக்கு பாதுகாக்க ஒரு தலைமுறையும், பாதுகாக்க ஒரு நாடும் இருப்பதாகவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.