அச்சிடப்பட்ட பாடத் தொகுதியில் பாரிய குளறுபடி

 

6 ஆம் தர ஆங்கிலப் பாடத் தொகுதியின் அறிமுகப் பகுதியில் பொருத்தமற்ற இணையதளமொன்றின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளமை தொடர்பாக முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கல்வியமைச்சின் செயலாளர் நலக கலுவெவ தெரிவித்துள்ளார்.

அச்சிடப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ள 6 ஆம் தர ஆங்கிலப் பாடத் தொகுதியில் (Module), அறிமுகப் பகுதியில் பொருத்தமற்ற இணையதள முகவரி ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளதாக அதிகாரிகளுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இது குறித்து மேற்கொள்ளப்பட்ட உள்வாரி ஆய்வுகளின் மூலம், குறித்த முறைப்பாடு சரியானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அந்தப் பாடத் தொகுதிகளை விநியோகிக்கும் பணிகள் உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பாக முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்காக நாளை புதன்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்  முறைப்பாடு செய்யவும் அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.