
அங்கொடையில் தீப்பரவல்
அங்கொடை ஐ.டி.ஹெச் பகுதியில் உள்ள ஒரு கடையொன்றில் இன்று வெள்ளிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த தீயை கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கோட்டை தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.
4 மாடிகளைக் கொண்ட கடையியொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தீயை அணைக்கும் முயற்சிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.
இந்த சம்பவம் குறித்து அங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
