
அங்கஜனை நக்கலடிக்கும் சுகாஸ்
எங்கள் தலைவனின் மண்ணைக் கைப்பற்றிவிட்டதாகக் கொக்கரித்த அரசின் முகவர் அங்கஜன் இராமநாதன் அவர்களே உங்களது தலைவன் எவ்வாறு தலைதெறிக்க தப்பியோடினார் என்பதைப் பார்த்தீரா? என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று புதன்கிழமை வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும்,
கோட்டாபயவிற்கு ஏற்பட்ட இதேநிலை உங்களுக்கும் ஏற்படாதென்பதற்கு எவ்வித உத்தரவாதமுமில்லை. எங்கள் தலைவனின் மண்ணையல்ல, நிழலைக்கூட எவராலும் தொட முடியாது, என அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
