அக்குள் கருமை நீங்க உருளைக்கிழங்கு
அக்குள் கருமை நீங்க உருளைக்கிழங்கு
அக்குள் கருமை நீங்க உருளைக்கிழங்கு
⚫அக்குள் பகுதியில் அடிக்கடி ஷேவிங் செய்வது, வேக்ஸ் செய்வது நமக்கு இந்த மாதிரியான கருப்பை ஏற்படுத்தி விடுகிறது. இந்த கருப்பை போக்க நிறைய க்ரீம்களையும் அழகு சாதன பொருட்களையும் நாம் தேடி அலையவே வேண்டாம். நம் சமையலறை பொருட்களே இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது. உருளைக்கிழங்கு ஒரு இயற்கையான ப்ளீச்சிங் ஏஜெண்ட் மாதிரி செயல்படுகிறது. மேலும் இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை சரி செய்து புதுப்பிக்கிறது. அந்தவகையில் உருளைக்கிழங்கை எவ்வாறு பயன்படுத்துவதன் மூலம் அக்குள் கருமை நீங்கும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி
🎈தக்காளி சருமத்திற்கு நல்ல நிறத்தை கொடுக்க உதவுகிறது. உருளைக்கிழங்கு மற்றும் தக்காளியை சிறுது சிறுதாக நறுக்கி அரைத்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். இதை உங்கள் அக்குள் பகுதியில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீர் கொண்டு கழுவுங்கள். படுக்கைக்கு போவதற்கு முன் தினமும் செய்து வந்தால் அக்குளில் உள்ள கருமை நீங்கும்.
உருளைக்கிழங்கு மற்றும் பால்
🎈உருளைக்கிழங்கு அக்குள் பகுதியில் ஏற்பட்டுள்ள சரும நிறத்தை மாற்றவும் பால் சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை கொடுக்கவும் உதவுகிறது.
🎈உருளைக்கிழங்கை அரைத்து அதன் ஜூஸை எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை அக்குள் பகுதியில் தடவி சில நிமிடங்கள் காய விடவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால்இ அக்குளில் உள்ள கருமை நீங்குவதோடு அக்குள் மென்மையடையும்.
உருளைக்கிழங்கு மற்றும் தேன்
🎈தேன் ஒரு இயற்கையான மாய்ஸ்சரைசர் மாதிரி செயல்பட்டு சருமத்திற்கு ஈரப்பதத்தை தருவதோடு அக்குள் பகுதியில் உள்ள பாக்டீரியாவை அழிக்கிறது.
🎈உருளைக்கிழங்கின் தோலை உரித்து அதை அரைத்து அதன் சாற்றை மட்டும் எடுத்து கொள்ளுங்கள். 2 டேபிள் ஸ்பூன் உருளைக்கிழங்கு ஜூஸை ஒரு பெளலில் எடுத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை அப்படியே உங்கள் அக்குள் பகுதியில் அப்ளே செய்து 20 நிமிடங்கள் காய விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி உலர்த்த வேண்டும். இதை தினமும் செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.
உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளரிக்காய்
🎈1/4 பங்கு அளவு வெள்ளரிக்காய் மற்றும் 1 உருளைக்கிழங்கு இரண்டையும் நறுக்கி அரைத்து கொள்ளுங்கள். இதனுடன் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவை சேர்த்து நன்றாக கலக்கவும். இதை அக்குள் பகுதியில் தடவி 20-30 நிமிடங்கள் காத்திருக்கவும். பிறகு சாதாரண நீரில் கழுவவும். இதை ஒரு வாரத்திற்கு ஒரு முறை என செய்து வந்தால் அக்குளில் உள்ள கருமை நீங்கும்.
உருளைக்கிழங்கு மற்றும் லெமன் ஜூஸ்
🎈சர்க்கரை மற்றும் லெமன் ஜூஸ் இயற்கையான ஸ்க்ரப் மாதிரி செயல்படுகிறது. இது அக்குள் பகுதியில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது. இதனால் சரும நிறம் மாற்றம் பெறும்.
🎈2 டேபிள் ஸ்பூன் உருளைக்கிழங்கு மற்றும் லெமன் ஜூஸ் இரண்டையும் ஒரு பெளலில் எடுத்து கொள்ளுங்கள். அதில் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும். இதை அக்குள் பகுதியில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் விட்டு விடவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவி உலர்த்த வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நல்ல மாற்றம் கிடைக்கும்.
அக்குள் கருமை நீங்க உருளைக்கிழங்கு
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்