அக்குள் அரிப்பு நீங்க
🔴உடலிலேயே அக்குள் தான் மிகவும் சென்சிடிவ்வான பகுதி. அந்த பகுதியில் தான் அதிகமாக வியர்க்கவும் செய்கிறது. பொதுவாக வியர்வை அதிகமாக இருக்கும் இடத்தில் தான் பாக்டீரியாக்கள் அதிகம் வளர்ச்சி அடையும். பாக்டீரியாக்கள் அதிகம் பெருக்கமடையும் போது, அந்த இடத்தில் அரிப்புக்கள் ஏற்பட ஆரம்பிக்கிறது. அக்குள் பகுதியில் அரிக்க ஆரம்பித்தால், அதை சமாளிப்பது என்பது மிகவும் கடினமானது.
🔴ஒருவருக்கு பல காரணங்களால் அக்குளில் அரிப்பு ஏற்படலாம். அதில் மோசமான அக்குள் சுகாதாரம், அதிகப்படியான வியர்வை, காலநிலை மாற்றம், பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுகள், சோப்பு அல்லது பெர்ஃயூம்மில் உள்ள டாக்ஸின்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. அக்குள் அரிப்பை சந்திப்பவர்கள், அரிப்புடன் வலி, துர்நாற்றம், கருமையான மற்றும் சிவந்த அக்குளை அனுபவிக்கக்கூடும். ஆனால் இந்த பிரச்சனைக்கு ஒருசில இயற்கை தீர்வுகள் உள்ளன. அது என்னென்ன என்பதை இக்கட்டுரையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வேப்பிலை
🟡வேப்பிலைக்கு எப்பேற்பட்ட தொற்றுக்களையும் போக்கும் திறன் உள்ளது. ஏனெனில் இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகள் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது.
🟡வேப்பிலையை நீரில் போட்டு அடுப்பில் வைத்து 20 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, அந்நீரால் அக்குளை கழுவ வேண்டும்.
🟡இல்லாவிட்டால், ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 5-6 துளிகள் வேப்ப எண்ணெயை சேர்த்து கலந்து, அந்த நீரை அக்குளில் தினமும் தடவி வந்தால், அக்குள் அரிப்பு காணாமல் போய்விடும்.
எலுமிச்சை
🟡எலுமிச்சை சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக கருதப்படுகிறது. இதில் உள்ள சிட்ரிக் அமிலம், பாக்டீரியல் தொற்றுக்களை எளிதில் நீக்கி, விரைவில் அரிப்பு பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.
🟡ஒரு எலுமிச்சை துண்டை அக்குளில் 5 நிமிடம் மென்மையாக தேய்த்து, பின் குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்ய வேண்டும்.
🟡இல்லையெனில், எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, அந்நீரை அக்குளில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் அக்குளில் உண்டாகும் அரிப்பு நீங்கும்.
ஒத்தடம்
🟡அக்குளில் அரிப்பு மற்றும் எரிச்சல் அதிகமாக இருந்தால், அக்குளில் தொற்று கடுமையாக உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் காட்டன் துணியில் சில ஐஸ் கட்டிகளைப் போட்டு கட்டி, அக்குளில் 10 நிமிடம் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதனால் அக்குள் அரிப்பில் இருந்து விடுபடலாம்.
கற்றாழை
🟡கற்றாழையில் வலிமையான ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இந்த பண்புகள் அரிப்புக்களை நீக்குவதோடு, அக்குளில் உள்ள சிவந்து தடித்த சருமத்தையும் போக்கும்.
🟡கற்றாழை ஜெல்லை அக்குளில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 3-4 முறை பயன்படுத்தினால், அக்குள் அரிப்பு விரைவில் குணமாகும்.
🟡இல்லாவிட்டால், கற்றாழை ஜெல்லுடன் சிறிது மஞ்சள் தூளை கலந்து, அக்குளில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2 முறை செய்ய வேண்டும். இந்த முறையும் நல்ல பலனைத் தரும்.
தேங்காய் எண்ணெய்
🟡தேங்காய் எண்ணெயில் நல்ல கொழுப்புக்கள் மற்றும் வைட்டமின் ஈ உள்ளது. மேலும் இதில் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகளும் உள்ளன. இந்த பண்புகள் தான் அக்குள் அரிப்பை குறைக்கின்றன.
🟡தேங்காய் எண்ணெயை அரிப்புமிக்க அக்குளில் ஒரு நாளைக்கு பலமுறை தடவ வேண்டும். இதனால் அக்குள் அரிப்பு விரைவில் நீங்கும்.
அக்குள் அரிப்பு நீங்க
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்