அக்கா, தங்கையின் அந்தரங்கபுகைபடம்: இராணுவ சிப்பாய் கைது

ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான இராணுவ சிப்பாய் சகோதரிகள் இருவரின் நிர்வாணப் புகைப்படங்களை வைத்து மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடக்கில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் 21 வயதான குளியாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

16 வயதான பாடசாலை மாணவியுடன் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான சந்தேக நபர் அந்த மாணவியின் இளைய சகோதரியுடனும் தொடர்பு கொண்டு இவ்விருவரின் நிர்வாணப் புகைப்படங்களை ​ தனது வாட்ஸ்அப் மூலம் தனது அலைபேசியில் பதிவிறக்கம் செய்துகொண்டுள்ளார்.

அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி  அதனை தவிர்ப்பதற்காக மூத்த சகோதரியிடமிருந்து 50,000 ரூபாவை வங்கிக் கணக்கின் ஊடாக பெற்றுக்கொண்டார்.

அவ்வாறு அச்சுறுத்திய இராணுவ சிப்பாய், பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் 16 வயது மாணவி, இராணுவ வீரரின் முகநூல் பக்கத்தின் மூலம் காதல் உறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளார், ஆனால் இருவரும் ஒருவரையொருவர் சந்திக்கவில்லை என்று விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்