அக்கரைப்பற்றில் சுதந்திரதின கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள்

அக்கரைப்பற்றில், முன்னாள் அமைச்சர் மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையில், சுதந்திர தினத்தை வெகுவிமர்சையாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள், மாணவர்கள், சமூக அமைப்புகள் உள்ளிட்ட பல தரப்பினரின் பங்களிப்புடன், தேசிய ஒற்றுமை மற்றும் சுதந்திரத்தின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் இவ்வாண்டு நிகழ்வுகள் சிறப்பாக அமையவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.