அக்கரைப்பற்றில் கார் விபத்து: 9 மாத குழந்தை மரணம்

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று, பொத்துவில் ஏ-04 பிரதான வீதியின் தாண்டியடி பகுதியில் நேற்று புதன் கிழமை இடம்பெற்ற விபத்தில் குழந்தை உயிரிழந்தது.

அட்டாளைச்சேனைப் பகுதியைச் சேர்ந்த 9 மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அக்கரைப்பற்றிலிருந்து, பொத்துவில் நோக்கி பயணித்த கார் வீதியில் சென்ற மாட்டுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் கணவன், மனைவி மற்றும் குழந்தை சிக்கிய நிலையில் காயமடைந்த குழந்தை திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தது.

சடலம் அக்கரைப்பற்று வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளைத் திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க