அக்கரபத்தனை பிரதேச சபை மீண்டும் இ.தொ.கா வசம்

 

-மஸ்கெலியா நிருபர்-

அக்கரபத்தனை பிரதேச சபையின் 2026 ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது முறை சமர்பித்த போது அச்சபையின் அதிகாரம் மீண்டும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்க்கு வந்துள்ளது.

குறித்த சபையின் பாதீடு கடந்த கூட்ட அமர்வின் போது சமர்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டம் தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் வரவு செலவுத் திட்டத்திற்கான கூட்டம் நேற்று திங்கட்கிழமை சபை தவிசாளர் சத்தியமூர்த்தி ரதிதேவி தலைமையில் அக்கரப்பத்தனை பிரதேச சபை காரியாலயத்தில் நடைபெற்றது.

கூட்டத்தின் போது சமர்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்திற்கு 08 வாக்குகளால் வெற்றி அடைந்தன. அமர்வில் 14 பேர் கலந்து கொண்டிருந்ததுடன் ஐக்கிய தேசிய கட்சியை ஒருவரும் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஒருவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு பேரும் மொத்தம் ஆறு பேர் வாக்களிப்பின் போது வெளிநடப்பு செய்துள்ளனர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆளும் கட்சியை 08 வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனால் வரவு செலவு திட்டம் வெற்றிப்பெற்றது.

மேலும், இச்சபையானது கடந்த காலங்களிலும் தற்போதும் வருமானம் மிகவும் குறைந்ததாக இருக்கின்றது. எதிர்காலத்தில் பல்வேறு வேலை திட்டங்களை முன்னெடுப்பதற்கு தேவையான நிதி பலத்தை பெற்றுக் கொள்வதற்கு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ள நிலையில் உள்ளூராட்சி மன்ற ஆணையருக்கும் இது தொடர்பாக கலந்துரையாடியுள்ளோம்.

இச்சபையில் வளங்கள் மிகவும் குறைவாக இருப்பதனால் பெருந்தொகையாளர் மக்கள் வாழும் பிரதேசத்தின் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதாக இருந்தால் தேவையான வளங்களும் நிதி வளமும் இருக்க சகல உறுப்பினர்களும் முழு பங்களிப்பை வழங்க வேண்டும், மற்றும் சபை கட்சி வேறுபாடுகள் இன்றி சகல விடயங்களையும் நாங்கள் நேர்மையாக முன்னெடுக்கின்றோம்.

அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பாரிய சேதங்கள் ஏற்பட்டன. மேலும், சபையின் ஊடாக செய்ய வேண்டிய அனைத்து விடயங்களையும் முன்னெடுத்து வருகின்றோம். நிவாரண உதவி மற்றும் பாதிக்கப்பட்ட வீதிகளை சீர்திருத்தம் செய்து மீண்டும் மக்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து நடவடிக்கையை எடுப்பதற்கான பணிகளும் தற்போது இடம் பெற்று வருகின்றது.‌ எனவே எதிர்காலத்திலும் மக்களுக்கு செய்ய வேண்டிய அனைத்து பணிகளும் முறையாக இடம்பெறும் என சபை தவிசாளர் கருத்து குறிப்பிட்டார்.