அகில இலங்கை ரீதியில் மட்டு.மிக்கேல் கல்லூரி மாணவன் முதலிடம்

தற்போது வெளியாகியுள்ள க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளின்படி மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் தமிழ்வண்ணன் துவாரகேஷ் விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியாக முதலிடம் பிடித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டிற்கான க.பொ.த  உயர்தரப் பரீட்சை முடிவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை திகதி மாலை வெளியான நிலையில் இம்முறை 1,71,497 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் (Biological Science) தமிழ் மொழியில் தேசிய ரீதியில் மட்டக்களப்பு கல்லடியில் வசித்துவரும் தமிழ்வண்ணன் துவாரகேஸ் எனும் மாணவன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

உயிரியல் விஞ்ஞானத்தில் (Biological Science) தமிழ் மொழியில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற துவாரகேஸ் வைத்தியர்களான திரு.திருமதி தமிழ்வண்ணன் தம்பதியினரின் மூத்த மகனாகவும்,  மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட புனித மிக்கல் கல்லூரியின் மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.