சம்மாந்துறை வலய மாணவர்களுக்கு கெளரவம்

-அம்பாறை நிருபர்-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்வி பிரிவின் ஏற்பாட்டில் க.பொ.த. சாதாரண தரத்தில் 9A சித்திகள் மற்றும் க.பொ.த. உயர்தரத்தில் 3A சித்திகளை பெற்ற சம்மாந்துறை வலய மாணவர்களையும் பெற்றோர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு சம்மாந்துறை மஜீட் மண்டபத்தில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல். மாஹிர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், கட்சியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர், சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர், மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் ரிஸ்லி முஸ்தபா உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.