அகத்தியர் அடிகளார் கலந்து கொண்ட நூல் வெளியீட்டு விழா
-மூதூர் நிருபர்-
திருகோணமலை சம்பூரைச் சேர்ந்த சைவப்புலவர், கலாபூஷணம் அருளம்பலம் குகராஜா எழுதிய “கந்தபுராணம் சூரபன்மன் வதைப்படலம்” நூல் வெளியீட்டு விழா சம்பூர் கலாச்சார மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.
இந் நூலானது சம்பூர் தமிழ்க்கலா மன்றத்தினால் வெளியீட்டு வைக்கப்பட்டதோடு வைத்தியர் அ.ஸதீஸ்குமார் தலைமையில் இடம்பெற்றது.
இந் நூலானது நூலாசிரியரின் ஆறாவது நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நூல் வெளியீட்டு விழாவில் வரவேற்புரையை ம.சத்திதானந்தம் (அதிபர்) நிகழ்த்தினார்.
ஆசியுரையினை ஈசான சிவாச்சாரியார் க.கு.மோஹனா நந்த குருக்கல் வழங்கினார்.அருள் உரையினை தென்கைலை ஆதின முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் நிகழ்த்தினார்.நூல் அறிமுகத்தை சிரேஷ்ட இந்து சமய ஆசிரியர் சி.தில்லைநாதன் நிகழ்த்த, நூல் வெளியீடு நயவுரையை ஊடகவியலாளர் பா.பிரியங்கன் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நூல் வெளியீட்டு நிகழ்வில் மூதூர் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர்கள் ,இலக்கியவாதிகள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தருந்தமை குறிப்பிடத்தக்கது.