ஃபெராரி உரிமம் உள்ளவர் ‘எல்போட்’ உள்ளவர்களுடன் நேரத்தை செலவிடுவதில்லை!

ஃபெராரி உரிமம் உள்ள ஒருவர், ‘எல்போட்’ உள்ளவர்களுடன் நேரத்தை செலவிடுவதில்லை, என  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள புதிய ஜனநாயக முன்னணி அலுவலகத்தில் பாராளுமன்றத்திற்கு மீண்டும் திரும்புவதற்கான தனது நோக்கம் குறித்து ஊடகவியலாளர்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியதற்கு அவர் பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எல்போட் பாராளுமன்றத்தில் உறுப்பினராகும் எண்ணம் தனக்கு இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவிற்கும் தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்.

நாடு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியபோது தான் ஏற்றுக்கொண்ட சவாலின் வெற்றியால் தான் பணிவுடன் இருப்பதாகக் கூறிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மக்கள் நாட்டின் பொறுப்பை ஒரு புதிய குழுவிடம் ஒப்படைத்துள்ளதால், ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை அந்த அணி முறையாக நிறைவேற்ற வேண்டும், என, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.