ஃபலூடா ஐஸ்கிரீமில் தனது விந்தணுக்களை கலந்து விற்பனை செய்த வியாபாரி: வைரலாகும் வீடியோ

இந்தியாவில் தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் ஃபலூடா ஐஸ்கிரீம் விற்பனை செய்த வியாபாரி ஒருவர் தனது சிறுநீர் மற்றும் விந்தணுக்களை அதில் கலந்து விற்பனை செய்துள்ளார்.

இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி முகம் சுளிக்க செய்துள்ளது.

குறித்த காணொளியில் ஐஸ்கிரீம் வியாபாரி சுய இன்பத்தில் ஈடுபட்டு, அதன் பிறகு தனது விந்தணுக்களை ஃபலூடாவில் கலக்கி விற்பனை செய்த காட்சிகள் உள்ளன.

இந்த காணொளி இணையத்தில் வேகமாகப் பரவிய நிலையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வியாபாரி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, குறித்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த பழங்களை பரிசோதித்த அதிகாரிகள், அது கெட்டுப் போய் இருந்ததால் அவற்றை அப்புறப்படுத்தியதாக தெரிவித்துள்ளனர்.