ஹந்தானை மலை தொடர்களுக்கிடையில் காணாமல் போன மாணவர்கள் மீட்பு

கண்டி – ஹந்தானை மலைப் பகுதிக்குச் சுற்றுலா சென்ற நிலையில் காணாமல்போன மாணவர்களை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மீட்டுள்ளனர்.

கொழும்பு மற்றும் கிரிபத்கொட பகுதியைச் சேர்ந்த கொழும்பில் உள்ள பிரபலப் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 16 மற்றும் 17 வயதிற்கிடைப்பட்ட மாணவர்கள் குழுவே இவ்வாறு காணாமல் போயிருந்தது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

பாடசாலை விடுமுறையை தொடர்ந்து நேற்றைய தினம் புதன் கிழமை ஹந்தானை மலை தொடர்களுக்கு 10 பேர் கொண்ட மாணவர் குழுவொன்று சுற்றுலா பயணத்தை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் குறித்த மாணவர்களில் ஒருவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து திரும்பி வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை மாலை 6 மணியை கடந்ததால் வெளிச்சமின்மை, திடீர் மூடுபனி ஏற்பட்டதால் மாணவர்கள் வழி தவறிச் சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பின்னர் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது குறித்த மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்