ஸ்ரீ லங்கன் விமானச் சேவை இடைநிறுத்தம்

ஸ்ரீ லங்கன் விமானச் சேவையானது, இலங்கைக்கும் ரஷ்யாவின் மொஸ்கட் நகரத்துக்கும் இடையில் நடத்திய விமானச் சேவையை, இன்றிலிருந்து இடைநிறுத்தியுள்ளது.

நிர்வகிக்க முடியாத காரணத்தால் இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக, ஸ்ரீ லங்கான விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

ரஷ்யாவின் நிலைமை வழமைக்குத் திரும்பியதன் பின்னர், அந்த சேவையை மீளவும் ஆரம்பிப்பதற்கு நிறுவனம் எதிர்பார்க்கின்றது என்று நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கன் விமானச் சேவை, ​கட்டுநாயக்க மற்றும் மொஸ்கட் நகரத்துக்கு இடையில், வாரத்தில் இரண்டு தடவைகள் விமானச் ​சேவைகளை நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.