Sri Lanka Tamil News Site

வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியை விட்டு பாய்ந்து விபத்து

- Advertisement -

-யாழ் நிருபர்-

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்லிப்பழை – காங்கேசன்துறை வீதியில் பயணித்த ஹயஸ் வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் உள்ள மதகுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்து இன்று சனிக்கிழமை பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

விபத்தில் வாகனத்தில் பயணித்த எவருக்கும் தெய்வாதீனமாக காயங்கள் எவையும் ஏற்படவில்லை.

தெல்லிப்பழை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!