வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உழவு இயந்திரம்: மாயமானவர்களில் இரு சிறுவர்களின் சடலம் மீட்பு
-அம்பாறை நிருபர்-
அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே நேற்று செவ்வாய்க்கிழமை வெள்ளத்தில் உழவு இயந்திரம் ஒன்று அடித்து செல்லப்பட்டமையைத் தொடர்ந்து 11 சிறுவர்கள் உட்பட 13 பேர் மாயமானார்கள்.
இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது அதே பகுதியில் உள்ள மின்கம்பத்தை பிடித்திருந்த நிலையில் 5 சிறுவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து காணாமல் போயுள்ள 6 சிறுவர்கள் உட்பட 8 பேரை மீட்கும் பணி இன்று புதன் கிழமை இடம்பெற்ற நிலையில் இவர்களில் 2 சிறுவர்களின் சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை தொடர்ந்தும் கடற்படையினர், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து காணாமல் போயுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.