வெளிநாட்டு நாணயம் செலுத்தும் எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறக்க கோரிக்கை

அனைத்து மாவட்டங்களிலும் டொலர் உட்பட வெளிநாட்டு நாணயம் செலுத்தும் எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறக்குமாறு, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த எரிபொருள் நிரப்பு நிலைய வேலைத்திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் அதில் கணிசமான அளவு வெளிநாட்டு நாணயங்கள் காணப்படும் எனவும் அவர் அமைச்சருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

வெளிநாட்டு நாணயங்கள் பல்வேறு நபர்களின் வசம் மறைத்து வைக்கப்பட்டிருப்பதால் அதனை வெளியில் எடுப்பதற்கு இந்த பிரேரணையை பரிசீலிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்