
வெப்பமான காலநிலையினால் அவதானமாக இருக்கவும்
நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலையை அடுத்து, மக்கள் தேவையில்லாமல் வெயிலில் செல்வதை தவிர்ப்பதுடன், அடிக்கடி நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர்.சிரோமணி ஜெயவர்தன தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெப்பமான காலநிலையாக இருப்பது இயல்பானது.
எவ்வாறாயினும், சூரிய ஒளியில் அதிகமாக இருப்பதை தவிர்க்கவும், முடிந்தவரை நிழலில் இருக்கவும் அவர் மக்களை வலியுறுத்தினார்