வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்பு

ஹம்பாந்தோட்டை தங்கல்ல நேடொல்பிட்டிய வெலிஆரே பிரதேசத்தில் வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலத்தை, தங்கல்ல பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை  காலை மீட்டுள்ளனர்.

விவசாயக் காணியொன்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. கோச்சியாய வீதி, பேரகம பிரதேசத்தை சேர்ந்த 38 வயது நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிரேதப் பரிசோதனைக்காக தங்கல்ல வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Minnal24 வானொலி