வீட்டில் ஏற்பட்ட திடீர் தீப்பரவல்

-அம்பாறை நிருபர்-

அம்பாறை – கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கல்முனைக்குடி 12 பகுதியில் பழைய தபால் நிலைய வீதியில் உள்ள வீட்டில் நேற்று திங்கட்கிழமை மாலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறு திடீரென ஏற்பட்ட தீ காரணமாக வீட்டில் இருந்தவர்கள் சத்தமிட்ட நிலையில் வீட்டின் அருகில் நின்ற இளைஞர்கள் கிராமவாசிகள் எரிந்த தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இதே வேளை மாநகர சபையின் தீ அணைப்பு பிரிவினருக்கு அழைப்பினை ஏற்படுத்திய போதிலும் உரிய இடத்திற்கு வருகை தரவில்லை என மக்கள் விசனம் தெரிவித்தனர்.

மேலும் குறித்த வீட்டில் ஏற்பட்ட மின்சார ஒழுக்கே இந்த தீப்பரவலுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மின்சார சபை ஊழியர்களால் குறித்த மின் ஒழுக்கு சரி செய்யப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க